

புதுச்சேரி மாநிலத்திலும் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஏதுவாக 9-ந் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
தீபாவளியன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாளான 9-ந் தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதே போல் புதுச்சேரி மாநிலத்திலும் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஏதுவாக 9-ந் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தட்டாஞ்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள கான்பெட் அங்காடியை திறந்து வைத்த முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது ரேசன் கடைகள் மூலம் தீபாவளி பரிசு தொகுப்பு விரைவில் வழங்கப்படும் என்றார்.