தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் கடந்த 2 நாட்களில் ரூ.3½ கோடி தங்க நாணயம் பறிமுதல்

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் இந்தப் பணியை ஒரு மாதத்தில் முடிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் கடந்த 2 நாட்களில் ரூ.3½ கோடி தங்க நாணயம் பறிமுதல்
Published on: 
Summary

பறிமுதல் செய்யப்பட்ட தங்க நாணயங்கள் மற்றும் ரொக்க பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்ததா என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ரவிபிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தங்க நாணயங்கள் பறிமுதல்

புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற தீவிர சோதனையில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் துறையினர் 2.5 கிலோ எடை கொண்ட ரூ.3.6 கோடி மதிப்பிலான தங்க நாணயங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ரூ.1.77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பதட்டமான வாக்கு சாவடி

இதைத் தவிர 181 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.72 ஆயிரம் விசாரணை பாதிக்கும் என்பதால் மேலும் விவரங்களை இப்போது வெளியிட முடியாது.

தட்டாஞ்சாவடி இடைதேர்தல்

தட்டாஞ்சாவடி இடைதேர்தலை பொறுத்தவரை 31 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெண்கள் மட்டும் பணியாற்றும் ஒரு சாவடியும் அடங்கும். 2 வாக்கு சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணி தொடர்ச்சியாக நடைபெறுவதுதான். இருப்பினும் இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின் அடிப்படையில் வாக்காளர் திருத்தப் பணி மீண்டும் அக்டோபர் 1-ந் தேதி முதல் தொடங்கியுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் இந்தப் பணியை ஒரு மாதத்தில் முடிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது படிவம் 6-ல் கேட்கப்பட்ட விவரங்களை இப்போது அளிக்க தேவையில்லை. பழைய படிவத்தில் குறிப்பிட்ட விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். மேலும், இதற்காக சிறப்பு முகாம்களை நடத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது புதுச்சேரி துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் கந்தசாமி, தில்லைவேல் உடனிருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நாணயங்கள் மற்றும் ரொக்க பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்ததா என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com