புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க போலி ஆவணம் சமர்பிப்பு- தம்பதி மீது வழக்குப்பதிவு

ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநருமான அர்ஜுன் ராமகிருஷ்ணன் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார்.
Pondycherry
Published on: 

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி ஹேமாவதி ஜோதி (வயது 31).

போலி ஆவணம்

இவர் தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்ப்பதற்கான படிவம் 6 உடன் சில ஆவணங்களை சமர்ப்பித்தார்.

அந்த ஆவணங்களை தேர்தல் பதிவு அலுவலர் சரிபார்த்தபோது, அவை போலியாக தயாரிக்கப்பட்டவை அல்லது மாற்றியமைக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தட்டாஞ்சாவடி தொகுதியின் தேர்தல் பதிவு அலுவலரும், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநருமான அர்ஜுன் ராமகிருஷ்ணன் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு

அதன்பேரில், போலீசார், ஹேமாவதி ஜோதி, அவரது கணவர் சதீஷ்குமார் மற்றும் ஒருவர் மீது வழக்குப்பதிந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com