பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்

காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.-வான தனவேலு கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தனவேலு எம்.எல்.ஏ.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தனவேலு எம்.எல்.ஏ.
Published on

புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் தனவேலு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் அவரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னதாக, தமது பாகூர் தொகுதியில் அரசு திட்டங்களை முடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  ஆளுநர் ஆய்வு செய்ய வந்தால் செல்லக்கூடாது என்று எனக்கு அழுத்தம் தரப்பட்டது எனவும் அரசு மருத்துவமனை குறைகளை பேசக்கூடாது என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் என்னை தடுத்தனர் என தனவேலு குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com