தஞ்சையில் கூட்டம் கூட்டமாக மரத்தில் தொங்கும் வவ்வால்களால் பொதுமக்கள் அச்சம்

தஞ்சையில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் கூட்டம் கூட்டமாக மரத்தில் தொங்கும் வவ்வால்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மரத்தில் தலைகீழாக தொங்கும் வல்வால் கூட்டம்.
மரத்தில் தலைகீழாக தொங்கும் வல்வால் கூட்டம்.
Published on

தஞ்சாவூர்:

உலகம் மூழுவதும் கொரோனா வைரஸ் பரவிவரும் சூழலில் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள 2 வகையான வவ்வாள்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இந்திய மருத்துல ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. தஞ்சை அரண்மனை வளாகம் பழைய தமிழ்பல்களைகழகம் செயல்பட்டு வரும் இடத்தில் உள்ள மரத்தில் வவ்வாள்கள் கூட்டம் கூட்டமா தலைகீழாக தொங்கியபடி உள்ளது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வவ்வாள்கள் மூலம் கொரோனா பரவுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர். அந்த வவ்வாள்களை பிடித்து இந்த வகை வவ்வாள்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக என ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com