

ஏஞ்சல் டி மரியா 14-வது நிமிடத்திலும், 33-வது நிமிடத்திலும் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பிஎஸ்ஜி 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஸ்டாபேஜ் நேரத்தில் (90+1) பிஎஸ்ஜி அணியின் தாமஸ் முனியர் ஒரு கோல் அடிக்க பிஎஸ்ஜி 3-0 என ரியல் மாட்ரிட் அணியை துவம்சம் செய்தது.