காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மோடியை வலியுறுத்த வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியை வலியுறுத்த வேண்டும் என கேரள முதல்வரை சந்தித்து பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மோடியை வலியுறுத்த வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்
Published on: 

சென்னை:

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை, திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நேற்று சந்தித்தனர்.

அப்போது அவர்கள் புதுச்சேரி, தமிழ்நாடு மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை ஏற்றுக்கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடியை 3 மாநில முதல்வர்களும் ஒன்றிணைந்து சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து கலந்து பேசி முடிவு எடுப்பதாக பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

இந்த சந்திப்பின் போது, தஞ்சை மண்டல தலைவர் டி.பி.கே.ராஜேந்திரன், மதுரை மண்டல கவுரவ தலைவர் எஸ்.ஆதிமூலம், குமரி மாவட்ட தலைவர் புலவர் செல்லப்பா, செயலாளர் வின்ஸ் ஆண்டோ, நெல்லை மண்டல தலைவர் புளியரை செல்லத்துரை மற்றும் இரணியல் முருகேசப்பிள்ளை ஆகியோர் உடன் இருந்தனர்.

மேற்கண்ட தகவல்கள் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com