புரோ கபடி லீக் - அரியானா அணியை வீழ்த்தி பத்தாவது வெற்றியை பதிவுசெய்தது குஜராத் அணி

புரோ கபடி லீக் போட்டியில் குஜராத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்திய குஜராத் அணி தனது பத்தாவது வெற்றியை பெற்றதுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. #ProKabaddi
புரோ கபடி லீக் - அரியானா அணியை வீழ்த்தி பத்தாவது வெற்றியை பதிவுசெய்தது குஜராத் அணி
Published on

அகமதாபாத்:

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. குஜராத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே குஜராத் அணியினர் சிறப்பாக விளையாடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 21 - 15 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணி முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் குஜராத் அணியினரின் கையே ஓங்கியது. ஆனாலும், குஜராத் அணிக்கு அரியானா அணி வீரர்கள் நெருக்கடி தந்தனர்.

இறுதியில், குஜராத் அணி 40 - 31 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குஜராத் அணி பத்தாவது வெற்றியை பெற்றதுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. #ProKabaddi 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com