

புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, விலைவாசி உயர்வு தொடர்பாக நேற்று உத்தரபிரதேச மாநில அரசை கடுமையாக விமர்சித்தார். லக்னோவின் காய்கறி விலை நிலவர பட்டியலை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது:-
பண்டிகை காலத்தில் விலைவாசி உயர்வு, சாமானியர்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. காய்கறி விலை, விண்ணை முட்டும் அளவுக்கு சென்று விட்டது. அதனால், பணிகளும், வர்த்தகங்களும் முடங்கி உள்ளன. ஆனால், பொய் பிரசாரத்துக்கு கோடிக்கணக்கில் செலவிடும் உத்தரபிரதேச அரசு, மக்கள் பிரச்சினைகளில் மவுனம் சாதித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.