சிகிச்சையின் போது போலீசார் கண்ணில் மிளகாய்பொடி தூவி தப்பியோடிய கைதி

சிகிச்சைகாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட கைதி காவலாக இருந்த போலீசார் கண்ணில் மிளகாய்பொடியை தூவி விட்டு தப்பியோடிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சையின் போது போலீசார் கண்ணில் மிளகாய்பொடி தூவி தப்பியோடிய கைதி
Published on

புதுடெல்லி:

குற்ற வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்த சந்தீப் தில்லான் என்ற கைதி சிகிச்சைக்காக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து வரப்பட்டார். அவருடன் சில போலீசாரும் காவலாக வந்தனர்.

டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது சந்தீப் தில்லானின் கூட்டாளிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் போலீசார் நிலைகுலைந்த போது கைதி சந்தீப் தில்லான் அவர்கள் கண்ணில் மிளகாய்பொடியை தூவிவிட்டு தப்பி ஓடி விட்டார். தப்பி ஓடிய சந்தீப் தில்லான் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க டெல்லி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com