அரச குடும்பத்தில் இருந்து மார்ச் 31ம் தேதி வெளியேறும் இளவரசர் ஹாரி, மேகன் மெர்கல்

பிரிட்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இருந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்கல் மார்ச் 31-ம் தேதி விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
இளவரசர் ஹாரி, மேகன் மெர்கல்
இளவரசர் ஹாரி, மேகன் மெர்கல்
Published on

லண்டன்:

பிரிட்டன் இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மேகன் மெர்கலை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனுக்கும் அரச குடும்பத்துடன் கருத்து வேறுபாடு நிலவுவதாக இங்கிலாந்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை வதந்தி என அரச குடும்பம் தெரிவித்தது.

இதற்கிடையே, பிரிட்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இருந்து ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக அறிவித்தனர். 

இதுதொடர்பாக இளவரசர் ஹாரி வெளியிட்ட அறிவிப்பில், பதவியிலிருந்து விலகினாலும் இங்கிலாந்து ராணிக்கு செய்ய வேண்டிய எங்கள் பணியை தொடர்ந்து செய்வோம் என தெரிவித்தார்.

இந்நிலையில், பிரிட்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இருந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்கல் மார்ச் 31-ம் தேதி விலகுகின்றனர் என அவர்கள்து செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com