மருமகள் மேகனுக்கு செல்லப்பெயர் சூட்டிய இளவரசர் சார்லஸ்

இளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளான நடிகை மேகன் மார்லேக்கு ‘டங்ஸ்டன்’ என்னும் செல்லப்பெயரை சூட்டி உள்ளார். #PrinceCharles #MeghanMarkle
மருமகள் மேகனுக்கு செல்லப்பெயர் சூட்டிய இளவரசர் சார்லஸ்
Published on

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரி. இவருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் ஹாரியின் தந்தை இளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளுக்கு ‘டங்ஸ்டன்’ என்னும் செல்லப்பெயரை சூட்டி உள்ளார்.

டங்ஸ்டன் போல் மேகன் உறுதியாகவும் வளைந்து கொடுக்காத தன்மையும் உள்ள வீரராக இருப்பதால் அவருக்கு இளவரசர் சார்லஸ் அந்த பெயரை சூட்டியதாக தெரிகிறது. கொஞ்சம் மென்மையானவராக இருக்கும் ஹாரிக்கு மேகன் ஒரு பலமாக இருப்பார் என்பதால் அப்பெயரை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com