கரூர் மாவட்டத்தில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு

கரூர் மாவட்டத்தில் உற்பத்தி குறைவால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு
Published on

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், நடையனூர், முத்தனூர், கவுண்டன்புதூர், சேமங்கி, மரவாபாளையம். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி, முல்லைப்பூ, சென்டுமல்லி, அரளி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா போன்ற வகைகை ளயும், மருவு, துளசி, கோழிக்கொண்டைப்பூ போன்ற தழை வகைகளையும் பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் பூக்கும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து லேசான கோணிப்பைகளில் போட்டு வைக்கின்றனர்.

பூக்களை வாங்குவதற்கு வேலாயு தம்பாளையம், கொடுமுடி, பிலிக்கல் பாளையம், பாண்டமங்கலம், பரமத்தி தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கிச் சென்று விற்பனை பூக்களை கட்டி முளம் கணக்கிற்கு விற்பனை செய்கின்றனர். சிறிய மாலை, பெரிய மாலை என கட்டி சில்லரையாகவும், கோவில் மற்றம் கும்பாபிஷேகம், திருமண விஷேசங்களுக்கு மொத்தமாகவும் விற்பனை செய்கின்றனர்.

கடந்த வாரத்தில் குண்டு மல்லி பூ கிலோ ரூ.200-க்கும் முல்லைப் பூ ஒரு கிலோ ரூ.200-க்கும் அரளி ஒரு கிலோ ரூ.100-க்கும், சம்மங்கி ரூ.30, மஞ்சள் சாமந்தி பூ ரூ.40-க்கும், கதம்பம் ஒரு கிலோ ரூ.40, ரோஜா ஒரு கிலோ ரூ.100-க்கும் மேலும் கோழிக்கொண்டை ஒருக்கட்டு பூ ரூ.10-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும், ஆடாதுடை ஒருக்கட்டு ரூ.5-க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று குண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூ.600-க்கும், முல்லை பூ ரூ.700-க்கும், அரளி ரூ.150-க்கும், சம்மங்கி ரூ.150-க்கும், மஞ்சள் சாமந்தி பூ ரூ.150-க்கும், கதம்பம் ஒரு கிலோ ரூ.120, கோழிக்கொண்டை ரூ.30-க்கும், ஆடாதுடை ஒருக்கட்டு ரூ.15-க்கும், ரோஜா ஒருகிலோ ரூ.200-க்கும் துளசி ஒரு கட்டு ரூ.15க்கும் வாங்கிச்சென்றனர்.

காவிரி, புகழூர் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததாலும் மழை பெய்யாததாலும், பூக்கள் விவசாயம் குறைந்து வருவதாலும் இதனால் உற்பத்தி குறைவால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. மேலும் கோவில் திருவிழாவை முன்னிட்டும் பூக்களின் தேவை அதிகரிப்பாலும் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com