ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. அறிவித்த தலித் வேட்பாளருக்கு திருமாவளவன் எதிர்ப்பு

ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக தலித் சமூகத்தைச் சார்ந்த ராம்நாத் கோவிந்தை பா.ஜ.க. அறிவித்துள்ளது தலித் மக்களின் மீதான கரிசனம் என்று எடுத்துக்கொள்ள முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. அறிவித்த தலித் வேட்பாளருக்கு திருமாவளவன் எதிர்ப்பு
Published on

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக தலித் சமூகத்தைச் சார்ந்த ராம்நாத் கோவிந்தை பா.ஜ.க. அறிவித்துள்ளது. இது தலித் மக்களின் மீதான கரிசனம் என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முயற்சியே ஆகும். தலித் மற்றும் பழங்குடியினரின் மதமாற்றத்தைத் தடுக்கவும், பா.ஜ.க.வுக்கு எதிரான தலித் மக்களின் எதிர்ப்பு நிலையை நீர்த்துப்போகச் செய்யவும் தான் தலித்துகளைக் குறிவைத்து பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அதற்குச் சான்றாகவே இந்தத் தேர்வு என நம்புகிறோம்.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக தலித் ஒருவரை அறிவித்திட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

2019 தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் பா.ஜ.க. தலித் ஆதரவு தோற்றத்தை முன்வைத்து வருகிறது. அதைச் சரியாகப் புரிந்துகொண்டு அதனை முறியடிக்கும் வகையில் தலித் மக்களுக்கு ஆதரவான உத்திகளை வகுப்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்கறை காட்டவேண்டும். அதில்தான் எதிர்க்கட்சிகளின் வெற்றி அடங்கியிருக்கிறது என்பதை விடுதலை சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com