கர்நாடக சட்டசபையின் பவள விழா: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்புரை ஆற்றுகிறார்

கர்நாடக மாநில சட்டசபையின் பவள விழாவை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்புரை ஆற்றுகிறார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபையின் பவள விழா: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்புரை ஆற்றுகிறார்
Published on

புதுடெல்லி:

கர்நாடக மாநில சட்டசபையின் பவள விழாவை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்புரை ஆற்றுகிறார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் சட்டசபையான விதான சவுதா பெங்களூரில் அமைந்துள்ளது. விதான சவுதா தொடங்கியதன் 60-ம் ஆண்டு விழா அக்டோபர் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்புரை ஆற்றுகிறார் என சபாநாயகர் கோலிவாட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சபாநாயகர் கோலிவாட் கூறியதாவது:

கர்நாடக சட்டசபை விதான சவுதா கட்டிடத்துக்கு 1951-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். அதனபின் 1956-ம் ஆண்டில் இது கட்டி முடிக்கப்பட்டது.

விதான சவுதா கட்டிடத்தின் பவள விழாவில் கலந்து கொள்ள வருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று அவரும் பங்கேற்க சம்மதம் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 25-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

அன்றைய தினம் கர்நாடக மாநிலத்தின் முதல் மூன்று முதல் மந்திரிகளான கே.சி.ரெட்டி, கெங்கால் ஹனுமந்தையா மற்றும் கடிடால் மஞ்சப்பா ஆகியோரை அழைத்து சிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com