இலங்கை பாராளுமன்றம் இன்று கூடியது - அதிபர் கோத்தபய உரை

இலங்கையின் 8-வது பாராளுமன்றத்தின் 4-வது கூட்டத்தொடரை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று தொடங்கிவைத்தார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
Published on

கொழும்பு:

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். அவர் கடந்த நவம்பர் 8-ந்தேதி அதிபராக பதவி ஏற்றார்.

இலங்கை பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 3-ந்தேதி நடந்திருந்த நிலையில் அதை ஒரு மாத காலத்துக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒத்திவைத்தார். இதையடுத்து இன்று இலங்கையின் 8-வது பாராளுமன்றத்தின் 4-வது கூட்டத்தொடரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தொடங்கிவைத்தார்.

காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வந்த அவரை சபாநாயகர் கரு ஜெயசூரியா வரவேற்று அழைத்து சென்றார். பின்னர் கோத்தபய ராஜபக்சே தனது முதலாவது உரையை நிகழ்த்தினார். அப்போது, கட்சி பேதமின்றி இலங்கை மக்களின் வறுமையை ஒழிக்க அனைவரும் செயலாற்ற வேண்டும் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com