ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 சாதனை: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 சாதனை: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து
Published on

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.

கிரையோ ஜெனிக் தொழில் நுட்பத்தில் செயல்படும் இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட 3,136 கிலோ எடை கொண்ட ஜி.சாட்-19 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் இந்த வரலாற்று சாதனையை பல்வேறு தலைவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

“ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை ஏவி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோவுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக நாடு பெருமிதம் கொள்கிறது’ என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com