பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-0 என வீழ்த்தியது டோட்டன்ஹான் ஹாட்ஸ்பர். #PremierLeague #MUFC
பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்
Published on

சொந்த மைதானத்தில் டோட்டன்ஹாம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அந்த அணி முதல் கோலை பதிவு செய்தது. கிறிஸ்டியன் எரிக்சன் அந்த கோலை அடித்தார்.

அதன்பின் மான்செஸ்டர் அணி பலமுறை கோல் அடிக்க முயற்சி செய்தது. ஆனால் பலன் கிட்டவில்லை. 28-வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் வீரர் அடித்த பந்தை பில் ஜோன்ஸ் தடுக்க முயன்றார். ஆனால் பந்து மான்செஸ்டர் யுனைடெட் கோல் எல்லைக்குள் சென்றது. இதனால் ஓன்கோல் மூலம் டோட்டன்ஹாமுக்கு மேலும் ஒரு கோல் கிடைத்தது. இதனால் 0-2 என மான்செஸ்டர் யுனைடெட் பின்தங்கியது.

அதன்பின் ஆட்டம் முடியும் வரை இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் 0-2 என தோல்வியடைந்தது.

இந்த தோல்வியின் மூலும் மான்செஸ்டர் யுனைடெட் புள்ளிகள் பட்டியலில் 53 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் சிட்டி 68 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் 15 புள்ளிகள் இடைவெளி உள்ளது. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணி முதல் இடத்தை பிடிப்பது சந்தேகமே.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com