பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் சிட்டி 3-1 என நியூகேஸ்டில் யுனைடெட் அணியை வீழ்த்தியது

பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் அணிக்கெதிரான தோல்வியில் இருந்து மீண்டு தற்போது வெற்றி பெற்றுள்ளது மான்செஸ்டர் சிட்டி. #PremierLeague #SergioAguero #Mancity #MCFC
பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் சிட்டி 3-1 என நியூகேஸ்டில் யுனைடெட் அணியை வீழ்த்தியது
Published on

இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற நியூகேஸ்டில் யுனைடெட் அணிக்கெதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி தனது சொந்த மைதானமான எத்திகாட் மைதானத்தில் விளையாடியது. மான்செஸ்டர் சிட்டி அணியின் செர்ஜியோ அகியுரோ ஹாட்ரிக் கோல் அடிக்க  3-1 என வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் கெவின் டி ப்ருயின் கொடுத்த பந்தை கோலாக மாற்றினார். 63-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதையும் கோலாக மாற்றினார். 67-வது நிமிடத்தில் நியூகேஸ்டில் யுனைடெட் அணியின் ஜேக்கப் மர்பி கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 83-வது நமிடத்தில் லெரோ சானே கொடுத்த பந்தை செர்ஜியோ கோலாக மாற்றினார். இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி 65 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட் 53 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், செல்சியா 50 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com