பிரிமீயர் லீக் கால்பந்து: ஸ்டோக் சிட்டியை 3-0 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்

பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் 3-0 என ஸ்டோக் சிட்டி அணியை வீழ்த்தியது. #MUFU #PremierLeague
பிரிமீயர் லீக் கால்பந்து: ஸ்டோக் சிட்டியை 3-0 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்
Published on

ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் பால் போக்பா கொடுத்த பந்தை வாலன்சியா கோலாக மாற்றினார். 38-வது நிமிடத்தில் மீண்டும் பால் போக்பா கொடுத்த அருமையான பாஸை கோலாக மாற்றினார் மார்சியல். இதனால் முதல் பாதி நேரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேரத்திலும் மான்செஸ்டர் அணியின் கையே ஓங்கியது. ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் மார்சியல் கொடுத்த பந்தை லூக்காகு கோலாகா மாற்றினார். இதனால் மான்செஸ்டர் 3-0 என வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com