சுஜித் மரணத்தை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார் - பிரேமலதா குற்றச்சாட்டு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சுஜித் மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்வது கண்டிக்கத்தக்கது என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரேமலதா
பிரேமலதா
Published on

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தே.மு.தி.க. வலுவான இயக்கமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளோம். தேர்தல் நடக்கும்போது தே.மு.தி.க. சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி திருப்தியான இடங்களை பெறுவதற்கு முயற்சி செய்வோம்.

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணமடைந்த சிறுவன் சுஜித் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சுஜித் மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்வது கண்டிக்கத்தக்கது. சுஜித் மீட்பு பணியில் அரசு இயந்திரம் முழுவீச்சில் செயல்பட்டது. இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறோம்.

அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்தர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com