போத்தனூர் அருகே கேபிள் டிவி ஆபரேட்டர் வீட்டில் 65 பவுன் நகை- பணம் திருட்டு

போத்தனூர் அருகே கேபிள் டிவி ஆபரேட்டர் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து 65 பவுன் நகை மற்றும் 1½ லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
போத்தனூர் அருகே கேபிள் டிவி ஆபரேட்டர் வீட்டில் 65 பவுன் நகை- பணம் திருட்டு
Published on

கோவை:

கோவை கரும்புக்கடை அருகே உள்ள சாரமேடு வள்ளலார் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 55). கேபிள் டி.வி. ஆபரேட்டர்.

கடந்த 11-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றார். பின்னர் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. சாகுல்ஹமீது வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் 65 பவுன் தங்க நகைகள், ரூ. 1½ லட்சம் ரொக்க பணம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். சாகுல் ஹமீது குடும்பத்துடன் வெளியூர் செல்வதை நோட்மிட்ட மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து சாகுல் ஹமீது போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து சாகுல் ஹமீதிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com