குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வண்ணாரப்பேட்டை போராட்டம் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் பரவுவதால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வண்ணாரப்பேட்டை போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக 33 நாட்களாக நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக வாபஸ்.
கொரோனா வைரஸ் காரணமாக 33 நாட்களாக நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக வாபஸ்.
Published on

சென்னை:

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடி மக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து கடந்த மாதம் 14-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதால் இந்த போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

இதையேற்று கடந்த 33 நாட்களாக நடைபெற்ற தொடர் போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com