காலி பணியிடங்களை நிரப்பிட கோரி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நேற்று மாலை, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
காலி பணியிடங்களை நிரப்பிட கோரி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நேற்று மாலை, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் பாதுஷா, பொருளாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 7வது ஊதியக் குழுவில் கிராமிய அஞ்சல் ஊழியருக்கு அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

ஊழியர்களின் வேலை பளுவை காரணம் காட்டி சம்பள குறைப்பு செய்து முன் தேதியிட்டு பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். நிலுவையில் உள்ள வழங்கப்பட வேண்டிய ஆர்.பி.எல்.ஐ., இன்சென்டிவை உடனடியாக வழங்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். சங்க ஆலோசகர் சந்திரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com