காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் போர்ட்டர் பலி

காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தினருக்கு போர்ட்டராக பணியாற்றியவர் உயிரிழந்தார். #Porterkilled #ceasefire
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் போர்ட்டர் பலி
Published on

ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள பர்க்வால் எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகளின்மீது துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டுசென்று சேர்க்கும் போர்ட்டராக பணியாற்றியவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் ஜம்மு மாவட்டம், பல்வால் பாரத் பகுதியை சேர்ந்த தீபக் குமார் என தெரியவந்துள்ளது.

இதேபோல், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பெர்காலி எல்லைக்கோட்டு பகுதியிலும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார். 

உத்தம்பூர் பகுதியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Porterkilled #ceasefire

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com