புதுவை எம்.எல்.ஏ.க்கள் மேகாலயா பயணம்

புதுவை சட்டப்பேரவை செயலகம் சார்பில் எம்.எல்.ஏ.க்களை வருகிற 3-ந் தேதி தொடங்கி 8-ந்தேதி வரை மேகாலயா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் அழைத்து செல்கின்றனர்.
புதுவை எம்.எல்.ஏ.க்கள் மேகாலயா பயணம்
Published on

புதுச்சேரி:

புதுவை சட்டப்பேரவை செயலகம் சார்பில் எம்.எல்.ஏ.க்களை வருகிற 3-ந் தேதி தொடங்கி 8-ந்தேதி வரை மேகாலயா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் அழைத்து செல்கின்றனர்.

மேகாலயாவில் சட்டமன்றம், முக்கிய அலுவலகங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் பார்வையிடுகின்றனர். இதற்காக 3-ந்தேதி அன்று காலை 8 மணிக்கு சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு விமானம் மூலம் எம்.எல்.ஏ.க்கள் செல்கின்றனர். அங்கிருந்து பிற்பகலில் மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கிற்கு விமானத்தில் செல்கின்றனர். தொடர்ந்து மேகாலயாவில் 8-ந் தேதி வரை புதுவை எம்.எல்.ஏ.க்கள் முகாமிடுகின்றனர்.

8-ந் தேதி மதியம் விமானம் மூலம் கொல்கத்தா வந்து அங்கிருந்து சென்னைக்கு 9-ந் தேதி அதிகாலை வந்து சேர்கின்றனர். இந்த பயணத்தில் மொத்தம் 20 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com