மு.க.ஸ்டாலினுக்கு புதுவை காங்கிரஸ் வாழ்த்து

தி.மு.க. புதிய தலைவராக இன்று பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #DMKThalaivarStalin #MKStalin
மு.க.ஸ்டாலினுக்கு புதுவை காங்கிரஸ் வாழ்த்து
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. புதிய தலைவராக இன்று பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமை பொறுப்பிற்கு ஏற்ற போற்றுதலுக்குரிய பொருத்தமான தலைவர் தன் இளமைக் காலம் முதல் இன்று வரை திராவிட முன்னேற்ற கழக வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் அயராது பாடுபடும் ஆற்றல் மிக்க தலைவர் ஸ்டாலின்.

தமிழின மக்கள் உரிமைகளை மீட்டெடுக்க நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு களம் சென்று வெற்றிகண்ட திராவிடத்தின் தீவிர பற்றாளர்.

கருணாநிதி தி.மு.க.வை எப்படி கட்டுக்கோப்பாய் வழி நடத்தி சென்றாரோ அவரை போன்றே கழகத்தை செவ்வன வழி நடத்தும் ஒட்டு மொத்த ஆற்றலை ஒருங்கே பெற்ற சிறந்த தலைவர் ஸ்டாலின்.

தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக உயர்ந்து தி.மு.க. பொறுப்பை ஏற்கின்ற தளபதி ஸ்டாலின் சீரிய தொண்டு சிறந்து விளங்கிடவும், கொள்கை சார்ந்த அரசியலில் வெற்றி மகுடம் சூடிடவும் புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் அன்புடன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

இவ்வாறு நமச்சிவாயம் கூறியுள்ளார். #DMKThalaivarStalin #MKStalin

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com