அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஜூலை 5ல் வடகொரியா பயணம் - வெள்ளை மாளிகை

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ ஜூலை 5-ம் தேதி வடகொரியா சென்று அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #KimJongUn #MikePompeo
அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஜூலை 5ல் வடகொரியா பயணம் -  வெள்ளை மாளிகை
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேசினர். இதையடுத்து,  வடகொரிய அதிபர் தங்களது நாட்டில் செயல்பட்டு வந்த அணு சோதனை மையங்களை மூடினார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ ஜூலை 5-ம் தேதி வடகொரியா சென்று அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியாவுடன் அதிபர் கிம் ஜாங் அன்னுடன் போட்ட ஒப்பந்தம் குறித்தும், அணு சோதனை மையங்களை அழிப்பது தொடர்பாகவும் பேசுவதற்காக அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக்  பாம்பியோ ஜூலை 5-ம் தேதி வடகொரியா செல்ல உள்ளார் என தெரிவித்துள்ளது .#KimJongUn #MikePompeo 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com