சிமோன்ஸ், பொல்லார்ட் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டனர்: ஜாகீர்கான் பேட்டி

சிமோன்ஸ், பொல்லார்ட் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டனர் என்று 7-வது தோல்விக்கு பிறகு டெல்லி கேப்டன் ஜாகீர்கான் கருத் தெரிவித்துள்ளார்.
சிமோன்ஸ், பொல்லார்ட் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டனர்: ஜாகீர்கான் பேட்டி
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. லென்டில் சிமோன்ஸ் (66 ரன், 5 பவுண்டரி, 4 சிக்சர்), கீரன் பொல்லார்ட் (63 ரன், 5 பவுண்டரி, 4 சிக்சர்) அரைசதம் அடித்தனர். மெகா இலக்கை நோக்கி களம் புகுந்த டெல்லி அணி 13.4 ஓவர்களில் 66 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. ஐ.பி.எல்.-ல் டெல்லியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். மும்பை தரப்பில் ஹர்பஜன்சிங், கரண் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com