திருவண்ணாமலையில் கிராம நிர்வாக அலுவலர் மீது ஆசிட் வீசிய போலீஸ்காரர் இடமாற்றம்

திருவண்ணாமலையில் முன்விரோத தகராறில் கிராம நிர்வாக அலுவலர் மீது ஆசிட் வீசிய போலீஸ்காரர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தென்றல் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் கிளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். வேங்கிக்கால் உண்ணாமலை நகரை சேர்ந்தவர் ஸ்ரீபால். போலீஸ்காரரான இவர் தற்போது கியூ பிராஞ்சில் பணியாற்றி வந்தார்.

இவரது மாமியார் விமலா வெறையூர் வருவாய் ஆய்வாளராக உள்ளார். பணியின் காரணமாக சிவக்குமார் விமலாவின் வீட்டுக்கு சென்றுவந்தார்.

அப்போது ஸ்ரீபால் மனைவியுடன் சிவக்குமாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை ஸ்ரீபால் கண்டித்தார். கடந்த 29-ந் தேதி இரவு சுமார் 11 மணியளவில் ஸ்ரீபால் அவரது மாமியார் விமலா ஆகியோர் தென்றல் நகரில் உள்ள சிவக்குமார் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டுள்ளனர்.

அப்போது ஆசிட் வீச்சில் இருவரும் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 2 பேரும் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் போலீஸ்காரர் ஸ்ரீபால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கியூபிராஞ்சில் இருந்து ஸ்ரீபால் இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் திருவண்ணாமலை மாவட்ட காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யபட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com