இணையத்தில் வைரலாகும் ‘கிக்கி சேலஞ்ச்’ - நாடு முழுவதும் போலீசார் எச்சரிக்கை

ஓடும் வாகனங்களில் இருந்து குதித்து சாலையில் நடனம் ஆடும் ‘கிக்கி சேலஞ்ச்’ வீடியோ வைரலாக பரவிவரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #KikiChallenge
இணையத்தில் வைரலாகும் ‘கிக்கி சேலஞ்ச்’ - நாடு முழுவதும் போலீசார் எச்சரிக்கை
Published on

புதுடெல்லி:

கனடாவை சேர்ந்த பிரபல ‘ராப்’ இசை பாடகர் டிரேக் என்பவர் சமீபத்தில் ‘கிக்கி சேலஞ்ச்’ என்ற பெயரில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓடும் காரில் இருந்து திடீரென சாலையில் கீழே குதித்து தனது மிகப்பிரபலமான ‘இன் மை பீலிங்ஸ்’ என்னும் பாடலுக்கு நடனமாடும் அந்த காட்சி சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாக பரவி வருகிறது.

‘கிக்கி சேலஞ்ச்’ என்று அழைக்கப்படும் இதைகண்டு உலகம் முழுவதும் பலர் இதுபோல் ஓடும் வாகனங்களில் இருந்து திடீரென கீழே குதித்து நடுச்சாலையில் நடனடமாடும் வீடியோக்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அவர்களின் நண்பர்கள் மூலம் அந்த காட்சிகள் விரும்பப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

ஒரு வீடியோவில் சாலையில் நடனம் ஆடும் ஒரு பெண்ணின் கைப்பை பறிபோவதும், இன்னொருவர் ஆடும்போது கார் மோதி தூக்கி எறியப்படும் அசம்பாவித காட்சிகளும் பரவி வருகிறது. இந்த சவாலை ஏற்று நடிகை ரெஜினா நடனம் ஆடிய வீடியோவும் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், இந்த ’கோரக்கூத்தை’ பார்த்து இந்தியாவிலும் சிலர் இதுபோன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் டெல்லி, மும்பை, பெங்களூரு, உத்தரப்பிரதேசம், சண்டிகர் காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக, டெல்லியில் ஆம்புலன்ஸ் கதவு திறந்திருக்க ஓடும் அந்த வாகனத்தின் பக்கவாட்டில் ஒருவர் நடனமாடும் காட்சியை வெளியிட்டுள்ள டெல்லி போலீசார், ‘சாலையில் நடனமாடுவது உங்களுக்கான புதிய  (மரணத்தின்) கதவுகளை திறந்துவிடும் "Dancing on the roads can open new doors for you." என பதிவிட்டுள்ளனர்.

அன்புள்ள பெற்றோரே.. உங்கள் குழந்தைகளின் வாழ்வில் எல்லா சேலஞ்களிலும் நீங்கள் துணையாக இருங்கள். ஆனால், கிக்கி சேலஞ்சில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள் என உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் எச்சரித்துள்ளனர். இதேபோல் மும்பை, சண்டிகர் மற்றும் பெங்களூரு நகர காவல் துறையினரும் எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டுள்ளனர். #Kikidancechallenge #PoliceissueKikiadvisories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com