மெரினாவில் புதைக்கப்பட்ட பெண் செக்ஸ் தகராறில் கொல்லப்பட்டாரா?- பரபரப்பு தகவல்கள்

மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்ட பெண் செக்ஸ் தகராறில் கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #MerinaBeach
மெரினாவில் புதைக்கப்பட்ட பெண் செக்ஸ் தகராறில் கொல்லப்பட்டாரா?- பரபரப்பு தகவல்கள்
Published on

சென்னை:

மெரினா கடற்கரை நீச்சல் குளத்தின் பின்புறம் கடற்கரை மணலில் நிர்வாண நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டிருந்த சம்பவம் கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது.

நேற்று காலையில் மெரினாவில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் இதனை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெண் புதைக்கப்பட்ட இடத்தில் நாங்கள் மண்ணை தோண்டிக் கொண்டிருந்த போதுதான் பெண்ணின் உடல் புதைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

அண்ணா சதுக்கம் போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மல்லாந்து படுத்த நிலையில் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் பெண்ணின் உடல் கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த பெண்ணை யாரோ கொன்று புதைத்திருப்பது தெரியவந்தது.

அப்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் மதுரையை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் கலைச்செல்வி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

40 வயதாகும் கலைச்செல்வி, மதுரையில் இருந்து சென்னை வந்து மெரினா பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. நிர்வாண நிலையில் கலைச்செல்வியின் உடல் மீட்கப்பட்டதால் அவர் செக்ஸ் தகராறில் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது இன்னும் தெரியாமலேயே உள்ளது.

இக்கொலை சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி உதவி கமி‌ஷனர் வெற்றிச்செழியன் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மெரினா பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த ஒருவருக்கும் கலைச்செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மெரினா கடற்கரையில் பெண் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைதொடர்ந்து மெரினாவில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். #MerinaBeach

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com