செல்வபுரத்தில் அரசு ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை

கோவை செல்வபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த அரசு ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செல்வபுரத்தில் அரசு ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை
Published on

கோவை:

கோவை செல்வபுரம் அருகே உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் மண்ணாதன். இவரது மகன் விஜயகுமார் (வயது 28). கோவை கலெக்டர் அலுவலத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

இவர் பயிற்சி முகாமுக்கு சென்று விட்டு நேற்று வீட்டுக்கு திரும்பி உள்ளார். வீட்டில் இருந்த தனது தந்தையிடன் உடல் சோர்வாக இருப்பதால் நாளைக்கு வேலைக்கு செல்லவில்லை என கூறி உள்ளார்.

இன்று காலை மண்ணாதன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த விஜயகுமார் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் விஜயகுமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் தற்கொலை செய்த கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com