

மகாராஷ்டிரா மாநிலத்தில் வர்தா பகுதியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். இந்த பிரசாரத்தில் பேசிய மோடி, 'காங்கிரஸ் கட்சி தலைவர் இந்துக்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் போட்டியிட பயந்து, இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் தொகுதியில் போட்டியிடுகிறார்' என கூறினார்.
இந்த வழக்கை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பிரதமர் மோடி மீதான தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதற்கு பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த வழக்கை மே 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.