காரிமங்கலத்தில் பா.ம.க. சார்பில் ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் மன்னன் தலைமை வகித்தார்.
காரிமங்கலத்தில் பா.ம.க. சார்பில் ஒன்றிய பொதுக்குழு கூட்டம்
Published on

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் மன்னன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணி குறித்தும், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அனைத்து கிராமங்களிலும் கொடி ஏற்றுதல், இளைஞர் அணி, இளம் பெண்கள் அணி, மாணவர் அணி பொறுப்பாளர்கள் தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மது ஒழிப்பு மற்றும் குடிநீர் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது போன்றவை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்திலும் படித்த 10 இளைஞர்கள், 10 இளம்பெண்கள், படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் 10 பேர், 7 பொறுப்பாளர்கள் என மொத்தம் 37 பேரை நியமிக்க வேண்டும் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com