மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஜே.பி.கிருபளானிக்கு பிரதமர் மோடி மரியாதை

சுதந்திர போராட்ட தியாகிகளான மவுலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் ஆசார்யா கிருபளானி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி அவர்களை பிரதமர் மோடி நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினார்.
மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஜே.பி.கிருபளானிக்கு பிரதமர் மோடி மரியாதை
Published on: 

புதுடெல்லி:

இந்தியாவின் முதல் கல்வித்துறை மந்திரியான மவுலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் எமர்ஜென்சியை எதிர்த்து போராடிய ஆசார்ய கிருபளானி ஆகியோரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இரு தலைவர்களுக்கும் மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசப்பற்று மிக்க இரு தலைவர்களும் இந்திய வரலாற்றில் மிகவும் போற்றத்தக்கவர்கள். சுதந்திர போராட்டத்துக்கு தங்களது பங்களிப்பை நல்கியவர்கள். தேசத்தை கட்டமைத்ததில் பெரும் பங்கு வகித்தவர்கள்.

மேலும், மகாத்மா காந்தியின் வழிமுறைகளை பின்பற்றி கிருபளானி நாட்டுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். அதில் 1920-ல் நடந்த ஒத்துழையாமை இயக்கம் மற்றும் 1970-ல் அமல்படுத்தப்பட்ட எம்ர்ஜென்சியை எதிர்த்து போராட்டம் ஆகியன மிக   முக்கியமானவை” என தெரிவித்துள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த உருது கவிஞர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத். நாட்டின் வளர்ச்சிக்காக கல்வித்துறையில் அவர் புகுத்திய சீர்திருத்தங்கள் நினைவு கூரத்தக்கவை. அவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X