பீகார் வெள்ளப் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிட்டார் - 500 கோடி நிவாரணம் அறிவிப்பு

பீகாரில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி முதல்-மந்திரி நிதிஷ் குமாருடன் வான்வழி மூலமாக இன்று ஆய்வு செய்தார். மேலும் மோடி நிவாரணமாக 500 கோடி ரூபாய் அறிவித்துள்ளார்.
பீகார் வெள்ளப் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிட்டார் - 500 கோடி நிவாரணம் அறிவிப்பு
Published on

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி பீகாரில் இதுவரை 341 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகாரின் 18 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. சுமார் 1.46 கோடிக்கும் அதிகமான மக்கள் மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வான்வழி மூலமாக வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்தார். அவருடன் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் மற்றும் துணை முதல் மந்திரி சுசில் குமார் மோடி உடன் இருந்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com