ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ரஷிய அதிபர் புதினுக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி இந்திய பிரதமர் மோடி, தொலைபேசி மூலம் புதினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ரஷிய அதிபர் புதின், பிரதமர் மோடி
ரஷிய அதிபர் புதின், பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

ரஷிய அதிபர் புதினுக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி இந்திய பிரதமர் மோடி, தொலைபேசி மூலம் புதினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் கூட்டாட்சியில் புதினின் தனிப்பட்ட பங்கை புகழ்ந்து பேசியதாக கூறினார். தனது டுவிட்டர் பக்கத்திலும் மோடி புதினுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார்.

“கொரோனா தொற்றை எதிர்கொள்வது உள்பட எதிர்வரும் காலங்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்றும் இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாகவும், கொரோனா பேரிடர் முடிவுக்கு வந்தபின்பு புதின் இந்தியா வருகை தர வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்ததாகவும்” பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com