மோடி வருகையை முன்னிட்டு இலங்கையில் போக்குவரத்து கட்டுப்பாடு

மோடி வருகையை முன்னிட்டு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக இலங்கை போலீசார் தெரிவித்தனர்.
மோடி வருகையை முன்னிட்டு இலங்கையில் போக்குவரத்து கட்டுப்பாடு
Published on

கொழும்பு:

பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) மாலத்தீவுக்கு செல்கிறார். அங்கிருந்து நாளை காலை 11 மணிக்கு அவர் இலங்கை தலைநகர் கொழும்புக்கு போய்ச் சேருகிறார். அதிபர் சிறிசேனாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவருக்கு சிறிசேனா மதிய விருந்து அளிக்கிறார். சில மணி நேரமே இலங்கையில் இருக்கும் மோடி, பின்னர் டெல்லிக்கு திரும்புகிறார்.

மோடி வருகையை முன்னிட்டு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக இலங்கை போலீசார் தெரிவித்தனர். காலை 11 மணியில் இருந்து 12 மணிவரை, அதிபரின் செயலகம் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்படும் என்றும், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். விமான நிலையம் செல்பவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே பயணிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com