குஜராத் மந்திரிசபை பதவியேற்புக்கு முன்னர் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி

விஜய் ருபானி தலைமையிலான குஜராத் மந்திரிசபை பதவியேற்புக்கு முன்னர் பிரதமர் மோடி தனது தாயாரை இன்று சந்தித்து ஆசி பெற்றார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல் மந்திரி விஜய் ருபானி தலைமையிலான புதிய மந்திரிசபை இன்று பதவியேற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் வந்தடைந்த பிரதமர் மோடி, காந்திநகர் ரய்சன் பகுதியில் உள்ள தனது இளைய சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனது தாயார் ஹீரா பென்-ஐ சந்தித்து ஆசி பெற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com