பிரதமர் மோடி நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்- டிரம்ப் பாராட்டு

பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ‘அவர் (மோடி) நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதற்கு அவருக்கு விருப்பம்தான் இல்லை’ என்று நகைச்சுவையாக கூறினார்.
பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
Published on

பியாரிட்ஸ் :

பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சுமார் 40 நிமிடங்கள் சந்தித்து பேசினர். பின்னர் இரு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி இந்தியில் பதிலளித்தார். முன்னதாக இரு தலைவர்களும் தனியே பேசுவதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் மோடி செய்தியாளர்களை கேட்டுக்கொண்டார்.

அப்போது டிரம்ப், ‘அவர் (மோடி) நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். ஆனால் ஆங்கிலத்தில் பேசுவதற்கு அவருக்கு விருப்பம்தான் இல்லை’ என்று நகைச்சுவையாக கூறினார். இதைக்கேட்ட அனைவரும் வெடித்து சிரித்தனர்.

மோடியும், டிரம்பும் கூட அவர்களுடன் இணைந்து சிரித்துக் கொண்டனர். அப்போது இருவரும் ஒருவர் மற்றவரின் கைகளை பிடித்திருந்தது அவர்களின் சிறந்த நட்பை பறைசாற்றுவதாக இருந்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com