உ.பி. முன்னாள் முதல் மந்திரி பகுகுணா தபால் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான நந்தன் பகுகுணாவின் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.#PMModi #formerCM #Bahuguna
உ.பி. முன்னாள் முதல் மந்திரி பகுகுணா தபால் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உ.பி.யின் முன்னாள் முதல் மந்திரி நந்தன் பகுகுணாவின் சிறப்பு தபால் தலையை நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், மகாத்மா காந்தி, ஆசார்ய வினோபா பாவே, ஆசார்யா நரேந்திரா தேவ், ராம் மனோகர் லோகியா, சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் நடவடிக்கையில் பகுகுணா ஈர்க்கப்பட்டார் என்றார்.

மேலும், பகுகுணா கல்வித் துறையில் அளித்த பங்களிப்பையும், மலைப்பகுதி மக்கள் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்தார். #PMModi #formerCM #Bahuguna #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com