டெல்லி: பிரதமர் மோடி தம்பி மகளிடம் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

டெல்லியில் இன்று பிரதமர் மோடியின் தம்பி மகளிடம் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையர்கள் அவரிடமிருந்து பர்ஸ் மற்றும் செல்போன் ஆகியவற்றை பரித்துச் சென்றனர்.
பிரதமர் மோடி - தமயந்தி
பிரதமர் மோடி - தமயந்தி
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி. இவர் குஜராத் மாநிலத்தில் நியாய விலைக் கடைகள் மற்றும் மண்ணெண்ணெய் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.

பிரகலாத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி. இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் இருந்து விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்திருந்தார்.

இன்று மாலை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கு செல்லும் விமானத்தில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்த தமயந்தி, சற்று நேரம் இளைப்பாறி விட்டு செல்வதற்காக வடக்கு டெல்லியில் உள்ள குஜராத் சமாஜ் பவனுக்கு ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் வந்தார்.

அந்த பையில் தனது கைபேசி, பணம் மற்றும் சில முக்கியமான ஆவணங்கள் இருந்ததாக குறிப்பிட்டு டெல்லி போலீசாரிடம் தமயந்தி புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com