ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி பெயரை சூட்ட வேண்டும் என எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ்
ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ்
Published on

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு), 1969-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில், டெல்லி வடமேற்கு தொகுதி பாஜக எம்.பியும் பஞ்சாபி பாடகருமான, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது காஷ்மீரில் 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்டது, யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவது குறித்து குறிப்பிட்டார். ஜவஹர்லால் அந்த காலத்தில் தவறு செய்துவிட்டதாக விமர்சித்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் நினைக்கிறோம். நம் முன்னோர்கள் செய்த தவறுகளுக்கு இப்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெயரை பிரதமர் மோடி பல்கலைக்கழகம் (PMU) என மாற்ற வேண்டும். மோடியின் பெயரில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com