ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி (கோப்பு படம்)
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி (கோப்பு படம்)
Published on

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் தளம் மூலம், ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “ஜனாதிபதியின் பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துக்கள். கொள்கை விஷயங்களைப் பற்றிய அவரது நுண்ணறிவு மற்றும் புரிதலிலிருந்து இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது. ஏழைகளையும் நலிவுற்றோரையும் மேம்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும்” என மோடி குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com