இலங்கை பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.

மக்கள் தீர்ப்பை மதித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகவேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. அதிபரும், மந்திரிசபையும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மகிந்த ராஜபக்சே தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கே நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே, புதிய பிரதமராக தனது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார் கோத்தபய ராஜபக்சே. அதைத்தொடர்ந்து, கொழும்பில் உள்ள பாராளுமன்றத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார். 

இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்சேகேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில். இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மகிந்த ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com