டெல்லியில் நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

டெல்லியில் நாளை மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் (கோப்புப் படம்)
மத்திய அமைச்சரவைக் கூட்டம் (கோப்புப் படம்)
Published on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. வரும் நாட்களில் மத்திய அரசு முக்கியமான மசோதாக்களை தாக்கல் செய்ய இருக்கிறது.

இந்நிலையில் நாளை காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

அப்போது முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com