காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து - ஜனாதிபதியின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
Published on

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின்  370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தும், காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்தும் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிக்கை ஜனாதிபதியின் கையொப்பத்துடன் ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com