பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: வைரஸ் பாதிப்பால் கிவிடோவா விலகல்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து வைரஸ் பாதிப்பினால் செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவா விலகியுள்ளார். #PetraKvitova
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: வைரஸ் பாதிப்பால் கிவிடோவா விலகல்
Published on

போட்டிக்கு தயரான நிலையில் கிவிடோவா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக ஹீதர் வாட்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவா (வயது 27), கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது, வீட்டிக்குள் புகுந்த மர்ம நபர் கத்தியால் கிவிடோவா கையில் குத்திவிட்டு பொருட்களை கொள்ளை அடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

படுகாயமடைந்த கிவிடோவாவுக்கு இடது கையில் நான்கு மணிநேரம் அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்கு பின்னர் சில மாதங்கள் கழித்து மீண்டும் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபனில் விளையாடிய அவர், ஜூனில் நடந்த ஏகன் கிளாசிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com