மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்திய வாலிபர் கைது

பெரும்பாறை-தாண்டிக்குடி மலைப்பாதையில் மங்களம்கொம்பு என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

பெரும்பாறை:

பெரும்பாறை-தாண்டிக்குடி மலைப்பாதையில் மங்களம்கொம்பு என்ற பகுதியில் தாண்டிக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரது மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். 

அப்போது மோட்டார் சைக்கிளில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு பையில் 20 மதுபாட்டில்கள் இருந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர் மங்களம்கொம்பு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 30) என்பதும், மதுபானத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com